ADDED : அக் 21, 2024 07:30 AM
கரூர்: கரூர் மாநகராட்சியை சுற்றி அமராவதி ஆறு, இரட்டை வாய்க்கால் செல்கிறது. அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும் உள்ளன. வாய்க்கால்களில் தற்போது தண்ணீருக்கு பதிலாக கழிவுநீரே செல்கிறது. இதனால், கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல், இரவு நேரங்களில் கொசுக்கடியால், மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
சணப்பிரட்டி, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிக்கும் மக்கள் கொசுக்கடியால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாமல் உள்ள குப்பை ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.