ADDED : அக் 14, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, 3வது வார்டு பகுதியில் மரக்-கடை சந்து பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகு-தியில் சில இடங்களில் மின்கம்பம் இருந்தும் அதில் மின்வி-ளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளதால் விஷஜந்துக்கள் உலா வருகின்றன. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.