/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா அளவீடு செய்ய கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
/
பட்டா அளவீடு செய்ய கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
பட்டா அளவீடு செய்ய கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
பட்டா அளவீடு செய்ய கலெக்டரிடம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: இலவச பட்டா இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என, மாகாளிப்பட்டி கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: குளித்தலை தாலுகாவிற்குட்பட்ட கழுகூர் மாகாளிப்பட்டியில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு, 2023ல் இலவச பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை அளவீடு செய்து, பிரித்து கொடுக்கவில்லை என்பதால் வீடு கட்ட முடியவில்லை. கடந்த ஆண்டு, குளித்தலை ஆர்.டி.ஓ.,விடம் மனு உள்பட பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுத்து இருக்கிறோம். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அளவீடு செய்து கொடுப்பதோடு, குடிநீர், சாலை, மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.