/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தும்பிவாடியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் அதிகாரம் மனு
/
தும்பிவாடியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் அதிகாரம் மனு
தும்பிவாடியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் அதிகாரம் மனு
தும்பிவாடியில் அடிப்படை வசதி கேட்டு மக்கள் அதிகாரம் மனு
ADDED : ஜூலை 02, 2024 07:39 AM
கரூர்: அரவக்குறிச்சி, தும்பிவாடியில் தெரு அடிப்படை வசதி கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் சத்திவேல் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி அருகில் தும்பிவாடி யில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து ஐந்து சாலை செல்லும் வழியில் தெருவிளக்குகள் இல்லை. பள்ளி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சாலையில் நடந்து வரும் போது, பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவில் வரும் போது மர்ம நபர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மயானத்துக்கு செல்லும் வழியில் சிமென்ட் சாலை இல்லாததால் அவதிப்படுகிறோம். எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.