/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் முற்றுகை
/
ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் முற்றுகை
ADDED : மே 15, 2024 08:06 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி அருகே, அவ்வைவழி பகுதியிலுள்ள, பெங்களூரு - -சேலம் இடையிலான ஒருவழி ரயில் பாதையை, இருவழி பாதையாக மாற்றும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, ரயில்வே பாதையின் இருபுறமும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கம்பிவேலி அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ரயில்பாதையை ஒட்டிய, சத்யா நகர், மேட்டுக்கொட்டாய், நேதாஜி நகர், பெருமாள்கோயில்மேடு ஆகிய பகுதி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் மண்சாலை உள்ளது. இதை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், ரயில்வே நிர்வாகம் கம்பிவேலி அமைக்கும் பணியை நேற்று மேற்கொண்டது. இதையறிந்த மக்கள் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் மற்றும் தர்மபுரி ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல், கம்பிவேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.

