/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி சரி செய்ய மக்கள் கோரிக்கை
/
குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி சரி செய்ய மக்கள் கோரிக்கை
குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி சரி செய்ய மக்கள் கோரிக்கை
குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி சரி செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : மே 09, 2024 06:28 AM
குளித்தலை : குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் கடந்த, 8 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்து வருகிறது.
இந்த இணைப்பில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துள்ளனர். தாலுகா அலுவலகம் வருவோர், தாலுகா அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களின் பணியாளர்கள், தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து குடிநீர் பயன்படுத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குழாயில் குடிநீர் வராததால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் ஜாகீர்உஷேன் கூறுகையில்,'' தாலுகா அலுவலகத்தில் பழுது ஏற்பட்டுள்ள காவிரி குடிநீர் இணைப்பு மற்றும் சின்டெக்ஸ் தொட்டியை சரி செய்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என நகராட்சி கமிஷினர், பொறியாளரிடம் மனு அளித்து புகார் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.