/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் மேல்நிலை தொட்டிசீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
குடிநீர் மேல்நிலை தொட்டிசீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
குடிநீர் மேல்நிலை தொட்டிசீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
குடிநீர் மேல்நிலை தொட்டிசீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 18, 2024 01:48 AM
கரூர், :கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியை, பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாநகராட்சி நரிகட்டியூர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
அதன் மூலம், நரிகட்டியூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி தற்போது, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், துாய்மை பணியாளர்கள் சிரமப்படு
கின்றனர். இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டியை, பராமரிப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.