/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்காளம்மன் சாலையை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
அங்காளம்மன் சாலையை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 05, 2025 07:15 AM
கரூர்: கரூர், அங்காளம்மன் நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் செல்லும் சாலையோரம் அரசு காலனி அருகில், அங்காளம்மன் நகருக்கு சாலை பிரிகிறது. இந்த பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இங்கு, சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளது. பள்ளம் மேடான சாலையில், வாகன ஓட்டிகள் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் அலுவலகம், பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் போது சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.