ADDED : ஆக 14, 2026 06:54 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:மேட்டுதிருக்காம்புலியூர், நரிகுறவர் காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த திருக்காம்புலியூர் பஞ்சாயத்து,
மேட்டுதிருக்காம்புலியூரில் நரிகுறவர் இன மக்கள் வசித்து
வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தனி நபர் கழிப்பிட வசதி மற்றும் சமுதயக்கூடம் ஆகியவை இந்த பகுதியில் இல்லை.
எனவே,
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, அந்த
பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் கிருஷ்ணராயபுரம் யூனியன்
அலுவலகத்தில் மனு அளித்தனர்.
