/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேனப்பாடியை தனி பஞ்சாயத்தாக ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு
/
சேனப்பாடியை தனி பஞ்சாயத்தாக ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு
சேனப்பாடியை தனி பஞ்சாயத்தாக ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு
சேனப்பாடியை தனி பஞ்சாயத்தாக ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு
ADDED : மே 27, 2025 01:31 AM
கரூர், சேனப்பாடி உள்பட பல கிராமங்களை பிரித்து, தனி பஞ்சாயத்தாக ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பஞ்.,ல் உள்ள சேனப்பாடி, முனியப்பனுார், மல்லம்பாளையம் கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதி சரியில்லை.
நாங்களே நன்கொடை வசூல் செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறோம். இது தற்காலிக தீர்வாக உள்ளதே தவிர, பிரச்னைக்கு நிரந்தமான தீர்வு கிடைக்கவில்லை.
தற்போதைய பஞ்., நிர்வாகம் சார்பில், இப்பகுதி தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. இந்த பகுதிகளை தனியாக பிரிந்து, புதிய பஞ்சாயத்தாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.