/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் மனு வழங்கல்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் மனு வழங்கல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் மனு வழங்கல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் மனு வழங்கல்
ADDED : ஜூலை 19, 2025 01:25 AM
கிருஷ்ணராயபுரம்;மாயனுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சமுதாயக்கூட வளாகத்தில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மணவாசி ஆகிய இரண்டு பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள மக்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டது.
இதில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், 15 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, 46 சேவைகள் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.