/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்
/
மக்கள் திட்டமிடல் இயக்கசிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 04, 2025 01:16 AM
குளித்தலை, ஜன. 4-
குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், முள்ளிப்பாடி பஞ்.,ல், மக்கள் திட்டமிடல் இயக்க சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
சேர்வைகாரன்பட்டியில், நுாலகம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பஞ்., தலைவர் நீலா வேல்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் கணேசன் தீர்மானங்களை வாசித்தார்.
இதில், 2025-26ம் ஆண்டுகளில் கிராம வளர்ச்சி திட்டப் பணிகள், முள்ளிப்பாடி ஊராட்சி பகுதிகளில் முன்களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இளம் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக
வாழ்வாதார இயக்கம் மூலம் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் பஞ்., துணைத்தலைவர் ராமநாதன், வார்டு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணித்தள பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மக்கள் திட்டமிடல் குழு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.