/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடாகோவிலில் மேம்பாலம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
/
தடாகோவிலில் மேம்பாலம் அமைக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 17, 2024 10:55 AM
அரவக்குறிச்சி: கரூர்- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அரவக்குறிச்சிக்கு செல்லும் பிரிவு ரோடு உள்ளது. கரூர், சேலம், பெங்களூரு மற்றும் வட மாவட்டங்கள், வட மாநில பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி, தாராபுரம், பழநி மற்றும் கேரள மாநிலத்திற்கு கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று, இந்த பிரிவிலிருந்து அரவக்
குறிச்சி வழியாக பஸ், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இதே போல அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கொத்தனார், தச்சர், பெயின்டர் என்று பல்வேறு கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் இந்த குறுக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை கடந்து செல்லும்போது, அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நீண்ட காலமாக இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மேம்பாலம் அமைத்தால் உயிரிழப்புகள் முற்றிலும் தடுக்கப்படும், எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

