ADDED : ஆக 15, 2026 07:00 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாநகராட்சி அலுவலகத்தில், செல்ல பிராணிகளுக்கு, உரிமம் பெறும்
சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 20க்கும் மேற்பட்ட செல்ல பிராணி
உரிமையாளர்கள், உரிமம் பெற விண்ணப்பங்களை வழங்கினர்.
விண்ணப்பத்தில்,
செல்ல பிராணியின் வயது, போட்டோ, செல்ல பிராணி உரிமையாளர் விபரம்
ஆகியவை அடங்கியிருந்தது. முகாமில், மாநகராட்சி மேயர் கவிதா,
ஆணையாளர் பிரித்திவிராஜ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
