/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு
/
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கோரி மனு
ADDED : அக் 30, 2024 01:28 AM
கரூர், அக். 30-
கடவூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டக் கோரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், கடவூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 2017ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை, பள்ளிக்கு என சரியான வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சில வகுப்புகள் மரத்தடியில் செயல்படுகிறது. மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.