/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சரியான சிகிச்சையின்மையால் குழந்தை இறப்பு மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி மனு

ADDED : அக் 01, 2024 06:58 AM
கரூர்: சரியான சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தாம்பூரை சேர்ந்த சுந்தரராஜன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் தனியார் மருத்துவமனையில், வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்த குங்குமசெல்வி என்பவர் கருத்தரித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனையில், ஏழாவது மாதம் ஸ்கேன் எடுத்த போது, வயிற்றில் பிரச்னை உள்ளது என டாக்டரிடம் தெரிவித்தார். குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது மாதமான கடந்த, 17 ல், பரிசோதனைக்கு சென்ற போது, ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின், வேறு டாக்டர்களிடம் மருத்துவ அறிக்கை காட்டிய போது, ஏழாவது மாதம் முதல், வயிற்றில் குழந்தைக்கு உணவு கிடைக்கவில்லை என்றனர். தனியார் மருத்துவமனை டாக்டரின் கவனக்குறைவால், குழந்தை இறப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.