/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கே.பி.குளத்தில் மைதானத்தை சீரமைக்க கோரி மனு வழங்கல்
/
கே.பி.குளத்தில் மைதானத்தை சீரமைக்க கோரி மனு வழங்கல்
கே.பி.குளத்தில் மைதானத்தை சீரமைக்க கோரி மனு வழங்கல்
கே.பி.குளத்தில் மைதானத்தை சீரமைக்க கோரி மனு வழங்கல்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: கே.பி. குளம் கிராமத்தில், மைதானத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில் கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், ரெங்கநாதபுரம் பஞ்.,க்குட்பட்ட கே.பி. குளம் கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விளையாட்டு மைதானம் சீரமைப்பதற்கான ஆணை, 10 மாதங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல், முதல்வர் தனிப்பிரிவு வரை பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மைதானத்திற்கு மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. உடனடியாக மைதான சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.