/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை குளத்தை துார் வார கோரி கலெக்டரிடம் மனு வழங்கல்
/
வெள்ளியணை குளத்தை துார் வார கோரி கலெக்டரிடம் மனு வழங்கல்
வெள்ளியணை குளத்தை துார் வார கோரி கலெக்டரிடம் மனு வழங்கல்
வெள்ளியணை குளத்தை துார் வார கோரி கலெக்டரிடம் மனு வழங்கல்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: வெள்ளியணை, பெரிய குளத்தை துார் வார வேண்டும் என, வெள்ளியணை பஞ்., முன்னாள் உறுப்பினர் அப்புசாமி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகில் வெள்ளியணையில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது. இதில் நீர் நிரம்பினால், 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் அதிகளவில் சுரக்கும்.
1976ல் திண்-டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், அழகாபுரி கிராமத்தில், குடகனாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதிலிருந்து, 120 கன-அடி தண்ணீர் வரும் வகையில், 55 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக குளம் மற்றும் குடகனாறு அணையில் இருந்து வரும் கால்வாய் துார் வாரப்படாமல் இருக்கிறது. குளத்தில் தண்ணீர் வறண்டு போனதால், நேரடியாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. குளத்தை நேரில் பார்வையிட்டு, துார்வாரிட தேவையான ஏற்பா-டுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறப்பட்-டுள்ளது.