தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தார் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய கோரி மனு வழங்கல்

தார் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய கோரி மனு வழங்கல்

தார் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய கோரி மனு வழங்கல்


ADDED : பிப் 10, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: துக்காச்சியில், தார் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டர் அலுவல-கத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், துக்காட்சி பஞ்சா-யத்திற்குட்பட்ட வேலாங்காட்டூர், ஒண்டியூர், வேலாயுதம்பாளையம், காட்டம்பட்டி, கணபதி நகர், செம்மங்கரை, தொப்பம்பட்டி ஆகிய கிரா-மங்களில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, தார் தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை அருகே நொய்யல் பாசன கால்வாய் மற்றும் 300 மீட்டர் சுற்றளவிற்குள், 25 வீடுகள் உள்ளன. 10க்கும் அதி-கமான மின் இணைப்புடன் கூடிய பாசன கிண-றுகள் உள்ளன. ஆலைக்கு மிக அருகில், 30 ஆயிரம் லிட்டர் காவிரி தரைமட்ட நீர்த்தேக்க கிணறும், 10 ஆயிரம் லிட்டர் உயர்மட்ட நீர்த்-தேக்க தொட்டியும் உள்ளது. இதனை பொருட்படுத்தாமல், வருவாய் துறை அளித்த ஆவ-ணத்தை ரத்து செய்ய வேண்டும். தவறான தக-வல்களை கொண்டு, தார் தொழிற்சாலைக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us