/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூடுதல் பஸ் இயக்க கோரி கரூர் கலெக்டரிடம் மனு
/
கூடுதல் பஸ் இயக்க கோரி கரூர் கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 11, 2025 07:24 AM
கரூர்: லிங்கத்துப்பாறை வழியாக, கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி அருகில் வடுகநாகம்பள்ளி, மூலப்பட்டி, கும்ப-மேட்டுப்பட்டி, லிங்கத்துப்பாறை
போன்ற ஊர்களுக்கு குறைவாக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு, பஸ்
இல்லாத நேரங்களில் மலைக்கோவிலுார் வரை சென்று, பஸ் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
இதனால் பள்ளி, கல்-லுாரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள்
சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அரவக்குறிச்சியில் இருந்து தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், லிங்கத்துப்பாறை,
மலைக்கோவிலுார் வழியாக கரூர் வரை தினசரி காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நேரங்களில்
பஸ்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க நடவ-டிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

