/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி கரூர் எஸ்.பி.,யிடம் மனு
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி கரூர் எஸ்.பி.,யிடம் மனு
ADDED : நவ 28, 2024 01:03 AM
ஏலச்சீட்டு நடத்தி மோசடி
கரூர் எஸ்.பி.,யிடம் மனு
கரூர், நவ. 28-
ஏலச்சீட்டு நடத்தி, மோசடி செய்த நபர்களிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என, குளித்தலை பகுதியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்டவர்கள், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளில், தனியார் நிறுவனம் சார்பில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில், குளித்தலை, தோகைமலை சுற்று வட்டாரத்தில், 100க்கும் மேற்பட்டவர்கள், 1 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தோம். ஏலச்சீட்டு முடிவடைந்த நிலையில், பணத்தை திரும்ப தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இது குறித்து கேட்டால், எங்களுக்கு மிரட்டல் விடுகின்றனர். ஏலச்சீட்டில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிகிறது. பணம் செலுத்தியவர்கள் அனைவரும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். உடனடியாக பணத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.