/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மனு
/
மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மனு
மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மனு
மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மனு
ADDED : பிப் 16, 2024 11:47 AM
கரூர்: 'மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையிலான நிர்வாகிகள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
கர்நாடகா மேகதாது அணையை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆணையத்தில் மேகதாது அணைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி தமிழ்நாடு, புதுவை அரசு தன் நிலைப்பாடு என்ன என்று இன்றுவரை விளக்கம் தராமல் இருப்பது மர்மமாக உள்ளது.
இந்த அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்க வேண்டும். பல்லடம் வரக்கூடிய பிரதமர் மோடி, மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தராது என அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கர்நாடகத்துக்கு தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் கண்டன தீர்மானம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.