/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய சங்கம் சார்பில் மனு வழங்கும் போராட்டம்
/
விவசாய சங்கம் சார்பில் மனு வழங்கும் போராட்டம்
ADDED : செப் 29, 2024 03:28 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., நல்லா கவுண்டம்பட்டி மக்களுக்கு, குடிநீர் பற்றாக்குறையை போக்கிட மேல்நிலை நீர்-தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
கழிவறையுடன் கூடிய சுகா-தார வளாகம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலையை தொடர்ச்சியாக அனைவருக்கும் வழங்கி, தினமும் கூலியாக, 319 ரூபாய் வழங்க வேண்டும், எதிர்காலத்தில் நாகனுார் பஞ்., புதிய பேரூராட்சியில் இணைப்பதை தடுக்க கோரியும், தமிழ்நாடு விவ-சாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில், தோகைமலை பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், யூனியன் அலுவலகம் சென்றடைந்தது.பின், கோரிக்கைகளை வலியுறுத்தி, யூனியன் அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் முனியப்பன், முருகன் மற்றும் நல்லா கவுண்டம்பட்டி பகுதி விவசாய சங்க நிர்வாகிகள் மணி, ராசம்மாள், இந்திராணி உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.