/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்
/
சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்
சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்
சட்டசபை குழுக்களுக்கு வரும் 20க்குள் மனுக்கள் அனுப்பலாம்
ADDED : டிச 06, 2024 07:27 AM
கரூர்: தமிழக சட்டசபை குழுக்களுக்கு வரும், 20க்குள் மனுக்கள் அனுப்பி வைக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சட்டசபை 2024-25ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, கரூர் மாவட்டத்தில் விரைவில் வர உள்ளது. இதனையொட்டி பொது பிரச்னை, குறைகள் குறித்து மனுக்களை தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை 600 009 முகவரியிட்டு, நேரடியாகவோ, கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் மூலமாகவோ டிச., 20 க்குள் அனுப்பலாம். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். உரிய காலத்திற்கு பின் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.