/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் ஜமாபந்தி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள்
/
குளித்தலையில் ஜமாபந்தி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள்
குளித்தலையில் ஜமாபந்தி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள்
குளித்தலையில் ஜமாபந்தி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள்
ADDED : மே 23, 2025 01:09 AM
குளித்தலை, குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நேற்று காலை 2025ம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடந்தது. குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் இந்துமதி, தனி துணை தாசில்தார்கள வெங்கடேசன், மகாமுனி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் முன்னிலையில், தோகைமலை குறு வட்ட வருவாய் கிராம மக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மனுக்கள் மீது, உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என, சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தெரிவித்தார். மொத்தம், 84 மனுக்கள் பெறப்பட்டன. ஆர்.ஐ.. முத்துக்கண்ணு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.