/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருந்து வணிகர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
/
மருந்து வணிகர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 29, 2025 07:15 AM
குளித்தலை: குளித்தலை, அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபத்தில், குளித்தலை கோட்டம் மருந்து வணிகர்கள் சங்க விழிப்புணர்வு கூட்டம், சங்கத் தலைவர் சாத்தப்பன் தலைமையில் நடந்தது.
செயலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், குளித்தலை மண்டல மருந்து ஆய்வாளர் மசுதுங், கரூர் மண்டல ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் பேசியதாவது: மருந்தகத்தில், மருத்துவர் பரிசோதனைப்படி, ஆன்டிபயோடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும். பழைய மருந்து சீட்டை பயன்படுத்தியும் அல்லது சுயமாகவும் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், உங்கள் மருந்துகளை பிறருக்கு பரிந்துரைக்காதீர். மருத்துவமனை இல்லாத மருந்தகத்தில், கரு கலைக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து வைத்திருக்கக் கூடாது.
மருந்துகளை முறையாக சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கையாள வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு மாறாக, செயல்படும் மருந்தாளுனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினர். விழிப்புணர்வு கூட்டத்தில் குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் இருந்து, 75க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர். மருந்து வணிகர் சங்க பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.