/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்கிய மழைநீர் அகற்ற கோரி கரூர் - ஈரோடு சாலையில் மறியல்
/
தேங்கிய மழைநீர் அகற்ற கோரி கரூர் - ஈரோடு சாலையில் மறியல்
தேங்கிய மழைநீர் அகற்ற கோரி கரூர் - ஈரோடு சாலையில் மறியல்
தேங்கிய மழைநீர் அகற்ற கோரி கரூர் - ஈரோடு சாலையில் மறியல்
ADDED : மே 24, 2024 06:48 AM
கரூர் : குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி கரூர் - ஈரோடு சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் நான்கு நாட்களாக கோடை கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருக்கிறது, கரூர் ஆண்டாங்கோவில் மேல்பாகம் பஞ்சாயத்துக்குப்பட்ட மருத்துவர் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி, அப்பகுதியினர் கரூர் - ஈரோடு சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் தேங்கிய நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, சாலை மறியில் கைவிடப்பட்டது. போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.