ADDED : மார் 13, 2026 04:15 AM
கரூர்: கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இருந்தபோதும், கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்க-ளுக்கு பஸ்கள் செல்கின்றன. இங்கிருந்து டவுன் பஸ்களும் செல்-கின்றன. கடந்த சில நாட்களாக, கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பயணிகளை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள பணத்தை திருடி செல்லும் அவலம் தொடர்கிறது. பூட்டி கிடக்கும் கடைகளின் அருகில், சில நபர்கள் அமர்ந்தபடி, பயணிகளை நோட்டமிட்டு, அவர்களிடம் இருந்து பணம், மொபைல்போன்களை அபேஸ் செய்து விடுகின்றனர். இதனால், கையில் பணமில்லாமல் சிலர் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து புகார் செய்யும் போது மட்டும், பஸ் ஸ்டாண்டில் தேவையின்றி அமர்ந்து இருக்கும் நபர்களை, போலீசார் விரட்டி விடுகின்றனர். மற்ற நேரங்களில், அவர்களின் நடமாட்டம் குறை-யவில்லை. மேலும், பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து விளக்கு-களையும் எரியும்படி செய்ய வேண்டும். நாள்தோறும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது அவசியம்.
