/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிள்ளபாளையம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் மும்முரம்
/
பிள்ளபாளையம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் மும்முரம்
பிள்ளபாளையம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் மும்முரம்
பிள்ளபாளையம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகள் மும்முரம்
ADDED : மே 22, 2025 01:52 AM
கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம் கிளை பாசன வாய்க்கால் துார் வாரும் பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை ரயில்வேகேட் அருகில் இருந்து, பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் வரை, கிளை பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, விளை நிலங்களில் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, வாய்க்கால் முழுவதும் அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்தது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகம் சார்பில், பொக்லைன் கொண்டு வாய்க்காலில் வளர்ந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.