ADDED : ஜூலை 22, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் பஞ்., வல்லம் கிராமத்தில் மக்கள் வசித்து
வருகின்றனர். குடியிருப்பு மக்களுக்கு குழாய் வழியாக குடிநீர்
வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வல்லம் கடைவீதி சாலை
அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
சாலையோர
பகுதிகளில் குடிநீர் தேங்கி வருவதால், மக்கள் அந்த வழியாக நடந்து
செல்லும்போது சேரும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே,
சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
