/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நகர பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் மீண்டும் அகற்றம்
/
கரூர் நகர பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் மீண்டும் அகற்றம்
கரூர் நகர பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் மீண்டும் அகற்றம்
கரூர் நகர பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் மீண்டும் அகற்றம்
ADDED : அக் 11, 2025 12:44 AM
கரூர், தமிழகத்தில் முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து இடையூறாக பிளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பிளக்ஸ் பேனர்களை, சாலையில் வைக்கின்றனர். அதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், அவ்வப்போது அகற்றப்படுகின்றன.
இந்நிலையில், கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, ஜவஹர் பஜார், திருமாலைநிலையூர் ரவுண்டானா, வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை பகுதிகளில், உரிய அனுமதி இல்லாமல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் அகற்றினர்.