/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய நிலங்கள் அருகில் பிளாஸ்டிக் குவியல்; சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்

ADDED : பிப் 13, 2025 03:04 AM
கரூர்: விவசாய நிலங்கள் அருகில், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி-களில், பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நெல், கோரை, சோளம் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. வாங்கல், நெரூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் அருகில், பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் பட்சத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்து, பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவது மட்-டுமின்றி, கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும். கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் போது, அவை இறக்கும் நிலை ஏற்படும். எனவே விவசாய நிலங்களின் அருகில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.