/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
/
பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : பிப் 14, 2025 07:16 AM
கரூர்: கரூர், ராயனுார் அருகில் உள்ள பாசன வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கிறது.
கரூர் அருகில், அமராவதி ஆற்றில் செட்டிபாளையம் தடுப்பணையில் இருந்து, பள்ளப்பாளையம், ஆண்டாங்கோவில் கிழக்கு, செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், வெங்கமேடு, அரசு காலனி, பஞ்சமாதேவி, நெரூர் வழியாக திருமுக்கூடலுார் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. இதில், ராயனுார் வழியாக செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து மில்கேட் வரை பாசன வாய்க்கால் செல்கிறது.
செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில், அதிகளவில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப் உள்ளிட்ட தேங்கி நிற்கிறது. மேலும் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து அசுத்தம் அடைந்துள்ளது. செல்லாண்டிபாளையம் பகுதியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. இங்கிருந்து வீசப்படும் கழிவுகள் பாசன வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, பாசன வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

