/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான கேரம் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
மாநில அளவிலான கேரம் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : மே 16, 2025 01:24 AM
கரூர், மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க, கரூர் மாவட்ட வீரர்கள் தேர்வு போட்டி, நாளை நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட கேரம் சங்க தலைவர் ராமசுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கேரம் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாநில அளவிலான ஜூனியர் மற்றும் இளைஞர் (யூத்) கேரம் சாம்பியன்ஷிப் போட்டி வரும் மே 23, 24, 25 ல்
நடக்கிறது. இதில் பங்கேற்கும் கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி நாளை (17ம் தேதி) பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
ஜூனியர் பிரிவில் பங்கேற்கும் கரூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர், 2007 -மே 26 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். யூத் பிரிவில் பங்கேற்போர், 2004 மே 26 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். மாவட்ட தேர்வு போட்டியில் வெல்வோர், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு 97509 91014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.