/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வட்டார பகுதிகளில் பிளம்ஸ் பழம் விற்பனை
/
கரூர் வட்டார பகுதிகளில் பிளம்ஸ் பழம் விற்பனை
ADDED : ஜூன் 01, 2025 01:29 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிளம்ஸ் பழம் விற்பனைக்கு குவிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதம், இனிப்பு மற்றும் புளிப்பு சுவை பிளம்ஸ் பழம் உற்பத்தி அதிகரிக்கும். தற்போது, கொடைக்கானலில் இருந்து கரூர் நகருக்கு நாள்தோறும் பிளம்ஸ் பழம் மூட்டை, மூட்டையாக விற்பனைக்கு வந்துள்ளது.
கரூர் உழவர் சந்தை, ஜவஹர் பஜார், சர்ச் கார்னர், கோவை சாலை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், தள்ளுவண்டிகளில் பிளம்ஸ் பழம் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
ஒரு கிலோ பிளம்ஸ் பழம், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீசன் காலங்களில் மட்டும், பிளம்ஸ் பழம் விற் பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.