/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்சோவில் சிக்கியவர் குண்டாஸில் கைது
/
போக்சோவில் சிக்கியவர் குண்டாஸில் கைது
ADDED : ஜூன் 27, 2025 01:33 AM
கரூர், வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பிரதீப், 25. இவர் மீது போக்சோ உள்பட மூன்று வழக்குகள், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. கடந்த, 7ல் அதே பகுதி சேர்ந்த ரூபன்குமார், 28, என்பவர் காந்தி நகர் பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிந்தார்.
அப்போது அவருடன், பிரதீப் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில், ரூபன்குமார் காயமடைந்தார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிந்து, பிரதீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கலெக்டர் தங்கவேல் உத்தரவுபடி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரதீப்பிடம், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.