/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர் மண்டிய வாய்க்கால் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
/
புதர் மண்டிய வாய்க்கால் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
புதர் மண்டிய வாய்க்கால் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
புதர் மண்டிய வாய்க்கால் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
ADDED : செப் 03, 2025 02:26 AM
கரூர், : கரூர், பிரம்மதீர்த்த சாலையிலுள்ள வாய்க்காலில் குப்பை, செடிகள் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மதீர்த்த சாலை வழியாக வாய்க்கால் செல்கிறது. குடியிருப்புகளை ஒட்டி வாய்க்கால் செல்கிறது. போதிய பராமரிப்பின்றி, வாய்க்கால் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது. இதனால் விஷ ஐந்துக்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
சில நேரங்களில் கரையோரம் உள்ள வீடுகளில் விஷ ஜந்துக்கள் நுழைகின்றன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வாய்க்காலில் விடப்படுகிறது. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கழிவுகளால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. வாய்க்காலை குப்பை கொட்டும் இடமாக, மாநகராட்சி பணியாளர்கள் மாற்றி விட்டனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மக்கள் நலன் கருதி, வாய்க்காளில் துாய்மை பணிக்கு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.