/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொய்யாமணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
பொய்யாமணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
பொய்யாமணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
பொய்யாமணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள செல்வகணபதி, மகா மாரியம்மன், மகா காளி-யம்மன், மலையாள கருப்பண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்-களுக்கான கோவில் புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் கிராம மக்கள், பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர். தீர்த்-தத்தை யாக வேள்வி சாலையில் வைத்து வாஸ்து, ஹோமம், உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரண்டு கால பூஜை முடிந்து, யாக சாலையில் இருந்த புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியர்கள் எடுத்து வந்த, கோபுர கலசத்திற்கு மேள தாளங்கள் முழங்க நேற்று காலை 9:00 மணியளவில் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர்.பின்னர், பொது மக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைய-டுத்து, மற்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்-தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பஞ்., துணைத்த-லைவர் தேன்மொழிதியாகராஜன், பஞ்., தலைவர் பாலன், குளித்-தலை தி.மு.க., செயலர் தியாகராஜன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஏராளமான கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.