/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர்களில் நெம்பர் பிளேட் பொருத்த போலீசார் அறிவுரை
/
டூவீலர்களில் நெம்பர் பிளேட் பொருத்த போலீசார் அறிவுரை
டூவீலர்களில் நெம்பர் பிளேட் பொருத்த போலீசார் அறிவுரை
டூவீலர்களில் நெம்பர் பிளேட் பொருத்த போலீசார் அறிவுரை
ADDED : ஏப் 23, 2025 01:43 AM
கரூர்,:கரூரில், டூவீலர்களுக்கு கட்டாயம் நெம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நேற்று அறிவுரை வழங்கினர்.
கரூர் மாவட்டத்தில், சமீப காலமாக டூவீலர் கொள்ளையர்களால், தங்க செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதே போல், கரூரில் மர்ம கும்பல் தொழில் அதிபரை கடத்த முயற்சி, கரூர் தமிழ் நகரில் காரில் சென்ற கும்பல், வீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை ஆகிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன.
டூவீலர் கொள்ளையர்கள் பெரும்பாலும், நெம்பர் பிளேட் பொருத்துவது
இல்லை என, தங்க நகைகளை பறி கொடுத்தவர்கள் புகாரில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, நேற்று மாலை கரூர் மனோகரா கார்னர் பகுதியில், போலீசார் நெம்பர் பிளேட் இல்லாமல் வந்த, டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, டூவீலரில் நெம்பர் பிளேட் பொருத்தவும், உரிய ஆவணங்களை வைத்திருக்கவும், ெஹல்மெட் அணியவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும், வாகன ஓட்டி
களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
ஆய்வின் போது, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

