கரப்பாளையத்தில் போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரப்பாளையத்தில் போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 12, 2026 07:14 AM

அரவக்குறிச்சி:தென்னிலை
அடுத்த கரப்பாளையம் கிராமத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போலீசார் சார்பில்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நாளுக்கு நாள்
அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்தும், இணையவழி பண மோசடி,
போலியான தொலைபேசி அழைப்பு, வங்கி விபரங்கள் மற்றும் ரகசிய எண்களை
கேட்டு மோசடி செய்யும் நபர்களிடம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும் என்று எடுத்துரைக்கப்
பட்டது.
மேலும், அறிமுகம்
இல்லாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை திறக்கக் கூடாது, வங்கிக் கணக்கு
விபரம், ஏ.டி.எம்., ரகசிய எண், ஓ.டி.பி., உள்ளிட்டவற்றை யாரிடமும்
பகிரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பெண்கள் மற்றும்
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, பொது இடங்களில்
பாதுகாப்பாக செல்வது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக
பயன்படுத்துவது, தேவையற்ற தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்
ஏற்பட்டால் தயக்கமின்றி காவல்துறையினரிடம் புகார் அளிப்பது
குறித்து விளக்கப்
பட்டது.
மேலும், கிராமப்புறங்களில் தனியாக
வசிக்கும் முதியவர்கள், அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள்
அனுமதிக்காமல் இருப்பது, சந்தேகத்திற்கிடமான நபர்களின்
நடமாட்டம்
இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறை குறித்து விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி., பானு, தென்னிலை இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
