/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட பா.ஜ., தலைவர் மீது போலீசார் வழக்கு
/
மாவட்ட பா.ஜ., தலைவர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஏப் 27, 2024 09:53 AM
கரூர்: சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி செயலாளர் ரவிச்சந்திரனை கைது செய்ததை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை, சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன், மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட, அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி இல்லாமல் ஒன்று கூடி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த, சாலை மறியலில் ஈடுபட்டதாக சின்னதாராபுரம் வி.ஏ.ஓ., அகிலா கொடுத்த புகார்படி, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள் மீது, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

