/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் சோதனை சாவடி எஸ்.பி., திறந்து வைப்பு
/
போலீஸ் சோதனை சாவடி எஸ்.பி., திறந்து வைப்பு
ADDED : ஜூலை 17, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர்-கோவை சாலை, வைரமடையில் தென்னிலை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சோதனை சாவடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், சாலை விரிவாக்க பணி காரணமாக, சோதனை சாவடி அகற்றப்பட்டது.
தற்போது, சாலை விரிவாக்க பணி நிறைவடைந்த நிலையில், புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கரூர் ரூரல் டி.எஸ்.பி., அப்துல் கபூர், இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், மகளிர் இன்ஸ்பெக்டர் மேனகா, எஸ்.ஐ., சத்திய பிரியா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

