/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி
/
அரவக்குறிச்சியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி
அரவக்குறிச்சியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி
அரவக்குறிச்சியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி
ADDED : ஏப் 05, 2024 01:43 AM
அரவக்குறிச்சி:வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி, கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.
அரவக்குறிச்சி
அருகே சவுந்தராபுரம் பகுதியில், நாடாளுமன்ற தேர்தலில்
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக, துணை ராணுவத்தினர்,
போலீசார் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி, அரசு மேல்நிலைப்
பள்ளியில் துவங்கியது. ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த், டி.எஸ்.பி.,
அப்துல் ரஷீத் ஆகியோர் தலைமையில் பேரணி நடந்தது.
இதில் துப்பாக்கி
ஏந்தியபடி துணை ராணுவத்தினர், போலீசார் என, 250க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர். பள்ளப்பட்டி ஷா நகர் பகுதியில் உள்ள, பள்ளப்பட்டி
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொடி அணிவகுப்பு நிறைவு பெற்றது.
பொதுமக்களிடையே வாக்களிக்கும் போது, ஏற்படும் அச்ச உணர்வை போக்கும்
விதமாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.