/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 3 பெண்கள் மாயம் போலீசார் தீவிர விசாரணை
/
கரூரில் 3 பெண்கள் மாயம் போலீசார் தீவிர விசாரணை
ADDED : நவ 16, 2024 03:34 AM
கரூர்: கரூரில் வெவ்வேறு பகுதிகளில், மூன்று பெண்களை காண-வில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கரூர், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் தேவஸ்ரீ, 21; பி.காம்., சி.ஏ., வரை படித்துள்ளார். இவர் கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, தேவஸ்ரீயின் தாய் தனலட்-சுமி, 49, போலீசில் புகார் செய்துள்ளார்.* கரூர் பஞ்சமாதேவி தங்கராஜ் நகரை சேர்ந்த மணிகண்டன் என்-பவரது மனைவி சுகந்தி, 31; டெய்லர். கரூரில் டெக்ஸ் நிறுவ-னத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 12ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுகந்தி, இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் மணிகண்டன், போலீசில் புகார் செய்துள்ளார்.
* கரூர் புத்தாம்புதுார் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மனைவி கோபிகா, 23; இவர், கரூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவ-னத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 6 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா, வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும், கோபிகா செல்லவில்லை. இதுகுறித்து, கணவர் ஜெயபால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.