/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாலிபர் மீது சரமாரி தாக்கு 3 பேருக்கு போலீசார் வலை
/
வாலிபர் மீது சரமாரி தாக்கு 3 பேருக்கு போலீசார் வலை
வாலிபர் மீது சரமாரி தாக்கு 3 பேருக்கு போலீசார் வலை
வாலிபர் மீது சரமாரி தாக்கு 3 பேருக்கு போலீசார் வலை
ADDED : நவ 19, 2024 01:49 AM
வாலிபர் மீது சரமாரி தாக்கு
3 பேருக்கு போலீசார் வலை
கரூர், நவ. 19-
கரூர் அருகே, டீ குடித்து கொண்டிருந்த வாலிபரை அடித்து உதைத்த, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாய்க்கால் மேடு ராமானுஜம் நகரை சேர்ந்தவர் கணேசன், 37; இவர் கடந்த, 16 மாலை கரூர், 80 அடி சாலையில் உள்ள, கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் சென்ற, அடையாளம் தெரியாத மூன்று பேர், கணேசனை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு தப்பி ஓடினர். அதில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன், போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை தாக்கி விட்டு, தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.