/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தங்கையை கத்தியால் குத்திய அண்ணனுக்கு போலீஸ் வலை
/
தங்கையை கத்தியால் குத்திய அண்ணனுக்கு போலீஸ் வலை
ADDED : ஜூன் 13, 2025 02:45 AM
கரூர்:கரூர் செங்குந்தபுரம், 5வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத், 47. இவர், பா.ஜ., முன்னாள் பொதுச்செயலர். இவரது தங்கை, கரூர், இந்திரா நகரை சேர்ந்த சுமிதா, 44. கரூர் செம்மடையில் உள்ள, 50 சென்ட் நிலம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக, ஜூன், 9ல் கோபிநாத் அலுவலகம் அருகே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூர், மக்கள் பாதை பகுதியை சேர்ந்த பா.ஜ., மத்திய நகர முன்னாள் தலைவர் கார்த்திகேயன், 44, கோபிநாத்துக்கு ஆதரவாக பேசி, சுமிதாவுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, கோபிநாத், கத்தியால், சுமிதா கையில் குத்தி, காயப்படுத்தி உள்ளார். பின், அவர் அங்கிருந்து தப்பினார். சுமிதா புகாரில், தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயனை, கரூர் டவுன் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபிநாத்தை தேடி வருகின்றனர்.