/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரிடம் போலீசார் விசாரணை
/
ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரிடம் போலீசார் விசாரணை
ADDED : அக் 08, 2025 01:52 AM
குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., பெரிய பனையூரில் ஆட்டோ டிரைவர் கார்த்திக், கடந்த, 2ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், லோகநாதன், கிஷோர், சூரியா, நவீன்ராஜா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட, ஐந்து பேரை ஏற்கனவே நங்கவரம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், குளித்தலை நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன், ஆனந்தகுமார், மனிதவாசு, மகாதேவன் ஆகிய நான்கு பேர் சரணடைந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த யோகேஷ்வரன் என்பரை, கடந்த, 5ல் போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில், 10 பேர் சிறையில் உள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்டவர்களில் சூரியா மற்றும் நீதிமன்றத்தில் சரணடைந்த, நான்கு பேர் என, மொத்தம், ஐந்து பேரிடம் நங்கவரம் போலீசார், நேற்று மதியம், 2:00 மணி முதல், இன்று மதியம், 2:00 மணி வரை, ஒருநாள் கஸ்டடி எடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.