/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்; ஐந்து பேர் கைது
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்; ஐந்து பேர் கைது
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்; ஐந்து பேர் கைது
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்; ஐந்து பேர் கைது
ADDED : ஜன 10, 2025 01:31 AM
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்; ஐந்து பேர் கைது
கரூர், :   மணல் திருட்டு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர், சணப்பிரட்டி பகுதியில் சவுடு மண் கடத்தப்பட்டு வந்த லாரியை, சாமானிய மக்கள் நலக்கட்சி  மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் பிடித்து, பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என கூறி, பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில்,  சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் அறிவித்தனர். போலீஸ் ஸ்டேஷன் அருகில் மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமையில் கூடினர். அங்கு கூடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.