/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது
ADDED : ஜன 19, 2025 07:02 AM
கரூர்: கரூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த-தாக, போலீஸ்காரரை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், நெரூர் அரங்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்-தவர் இளவரசன், 31. இவர், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரு-கிறார்; திருமணமாகவில்லை.
வெங்கமேடு பகுதியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு, இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மாணவி புகார் செய்தார். இதை யடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் அடிப்படையில், கரூர் மகளிர் போலீசார் நேற்று அதிகாலை, இளவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கைதான போலீஸ்காரர் இளவரசன், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, எஸ்.ஐ., ஒருவரை தாக்கிய வழக்கில், சஸ்பெண்ட் ஆகி, மீண்டும் பணிக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

