தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்


ADDED : மார் 04, 2024 11:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பகுதியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். தொடர்ந்து, டவுன் பஞ்., வார்டுகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மூலம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, பஞ்சப்பட்டி வட்டார தலைமை மருத்துவ அலுவலர் நிறைமதி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, டவுன் பஞ்., வார்டு கவுன்சிலர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் அரவக்குறிச்சி சார்பில் செய்திருந்தனர்.

* குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல், பொய்யாமணி அரசு துணை சுகாதார மையத்தில் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினர். முகாமில், சுகாதார பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us